தீபாவளி பண்டிகை ஆன்மீக விளக்கம் – பாகம் -1
தீபாவளி பண்டிகை ஆன்மீக விளக்கம் –
பாகம் -1
இந்து மத கலாச்சார பழக்க,வழக்கங்களில்
சாஸ்த்திரம்,சம்பிரதாயம்,
திருவிழாக்கள்,பண்டிகைகள்,போன்றவைகள் மனிதகுல வாழ்க்கையின்
நல் வாழ்விற்காக உருவாக்கப்பட்டவைகள் ஆகும்..
ஆனால் அதன் உண்மையான அறிவியல் விளக்கங்களை மறைத்து இதிகாசம், புராணங்கள் போன்ற
கதைகளாக வடித்துள்ளனர்.இதனால் காலப்போக்கில் இதன் பெருமைகளும்,மகத்துவங்களும் மறைந்து போவதற்கு இடமுண்டு.
இதில் இன்றைய கால சூழ்நிலையில் தீபாவளி பண்டிகையைப் பற்றி அறிவியல்பூர்வமான
விளக்கங்கள் அளிப்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தில்
இரண்யாசனை வதம் செய்து பூமாதேவியைக் காப்பாற்றி பூமியை வராகப்
பெருமான் தன "தெற்றுப் பல்லால்" தூக்கி
நிறுத்திய போது அவர் பல் பட்ட
இடத்திற்கு "காம ரூபம்" என
பெயர் வந்தது.
பூமாதேவிக்கும்,வராக
மூர்த்திக்கும் பிறந்தவன் தான் "நரகாசுரன்" இவன்
பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்து "அசுர பலம்"பெற்றான்.பின்பு
இந்திரனையும் வென்றான்.அதன் பின் “காம ரூபத்தில்"இருந்து கொண்டு
மக்களை மிகவும் துன்புறுத்தி பெருத்த அழிவை ஏற்படுத்தி வந்தான்.
நரகாசுரனை யாருமே அழிக்க முடியாததால் பல்லாயிரம் வருடங்களாக
இவனால் நரக வேதனையை அனுபவித்து வந்த மக்கள் "கிருஷ்ணவதார த்தில்"
கிருஷ்ண பகவானிடம் முறையிட அவர் சத்தியபாமாவுடன் புறப்பட்டுச் சென்று
கடுமையாக யுத்தம் செய்ததில் நரகாசுரன் மடிந்தான்.
பூமா தேவி தன் மைந்தன் இறந்த
தினத்தை மக்கள் கடை பிடிக்க வேண்டும்.
அதே சமயம் அதை "துக்க தினமாக" இல்லாமல் "பண்டிகை தினமாக"
கொண்டாட வேண்டுமென வரம் வாங்கினாள்.எனவே நரகாசுரன் இறந்த தினம் ஐப்பசி மாதத்தில் கிருஷ்ண பட்ச
சதுர்த்தசியில் சூரிய உதய
காலத் தில் "நரக
சதுர்த்தி"யாகக் கொண்டாடும் படி
கேட்டுக்கொண்டாள்.
பொதுவாக எண்ணெய் குளியல் சூரிய உதயத்திற்கு முன் செய்யும் வழக்கம்
இல்லை.ஆனால் நரகசதுர்த்தி அன்று மட்டும் சூரிய உதயத்திற்கு முன்
எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிக்கும்படி வரத்தை வாங்கினாள்.மேலும்
"நல்ல எண்ணையில் மகாலட்சுமியும்" "வெந்நீரில் கங்கையும்"இருக்க
வேண்டு மென வரம் வாங்கினாள்.இவ்வாறு குளிப்பவர்களுக்கு அகால
மரணமும்,நரக பயமும்,விலகும் என்று பகவான்
அருளினார்.
வட நாட்டில் பல இடங்களில் தீபாவளி நாளை குபேர பூஜையாகவும்,
மகா லட்சுமி பூஜையாகவும்,கொண்டாடுகிறார்கள்.புது கணக்குகள்
அன்று ஆரம்பிப்பார்கள்.தீபாவளி நாளும்,அதை அடுத்த அமாவாசை
நாளும் மிகமிகப் புனித நாளாகும்.
உடலில் தேய்க்க எண்ணெய் :
100
-மிலி நல்லெண்ணையில் , மிளகு 50 -எண்ணிக்கையில் போட்டு மித மாக காய்ச்சவும்
மிளகு அனைத்தும் மிதந்து புகை வரும் சமயம் இறக்கி
வடித்து சூடு ஆறியவுடன் தலை,மற்றும் உடல் முழுதும் தேய்த்து 15
-நிமிடம் கழித்து வெந்நீரில் குளிக்கவும்.
இதனால் உடலில் உஷ்ணம் நீங்குவதுடன்,தோலின் மேல் பகுதியில்
இரத்த ஓட்டம் நன்கு சீராகும்,பாக்டீரியாவினால்
ஏற்ப்படும் தொற்று
அறவே நீங்கும்.
1
-ஆலம்பட்டை,
2
-அரசம் பட்டை,
3
-அத்திப்பட்டை,
4
-புரசம்பட்டை,
5
-மாவுலிங்கப்பட்டை
ஐந்து மரப் பட்டைகளையும் நாட்டு மருந்து கடைகளில் வாங்கி இடித்து வெந்நீர்
காய்ச்சும் போது போட்டு வெந்நீர் கொதித்தவுடன் குளிக்கவும்.
இதனால் உடல் புத்துணர்ச்சி பெறுவதுடன்,நோய் எதிர்ப்பு சக்தி கிட்டும்.
பிறகு புத்தாடைகள் உடுத்தி முதலில் உண்ணும் "தீபாவளி
லேகியம்"
செய்முறை :
1
- சுக்கு -50 -கிராம்
2
- சித்தரத்தை 25 - கிராம்
3
-ஓமம் 10 - கிராம்
4
- அரிசி திப்பிலி -25 - கிராம்
5
- கண்டந் திப்பிலி -25 -கிராம்
6
- விரலி மஞ்சள் -ஒரு துண்டு
7
-நெய் - 50 - கிராம்
8
- நல்லெண்ணெய் -50- கிராம்
9
- பனை வெல்லம் - 200 -கிராம்
மருந்து சரக்குகளை வெயிலில் நன்றாக உலர்த்தி அம்மியில் போட்டு இடி த்து
பொடித்துக் கொள்ளவும்.வாணலியில் சிறிது நீர் விட்டு வெல்லத்தை
தூள் செய்து போட்டு கரைந்ததும் பாகுபதம் வரும் போது
மருந்து பொடியை போட்டு கிளறவும்.லேகியம் போல் இறுகி வரும்
பொது நெய்,எண்ணெய் விட்டு கிளறவும்,சிறிது
எடுத்து விரல்களில்
உருட்டிப் பார்த்தால் ஒட்டாத பதத்தில் இறக்கவும்.
தீபாவளி அன்று அதி காலையில் எண்ணை ஸ்நானம் செய்ததும் புத்தாடை
கள் அணிந்து கொண்டு முதலில் "தீபாவளி லேகியம்" ஒரு
டீஸ்பூன் அளவு எடுத்து சுவைத்து சாப்பிடவும்.இதனால் உடலில் குளிர்ச்சி சேராமல் தடுக் கும்,ஜலதோஷம் பிடிக்காது. கடலை
மாவு,நெய் சேர்ந்த பலகாரங்கள் உண் டாலும் வயிறு மந்தமோ,அஜீரணமோ ஏற்ப்படாது.
இந்த லேகியம் பலகாரங்கள் உண்ட பிறகு அரை டீஸ்பூன் அளவு சாப்பிட அனைத்தும் ஜீரணமாகி செரித்து விடும்.
இதுவரை ஆன்மீக விளக்கங்கள் அளிக்கப்பட்டது.ஆனால் இதில் வரும் புராணக்
கதைகளை அறிவியலாளர்கள் ஏற்றுகொள்வதில்லை இன்றைய
காலகட்டத்திற்கு மிகவும் முக்கியத் தேவையான தீபாவளி
பண்டிகையின் அறிவியல் ஆய்வு விளக்கம்
பாகம் -2 ல் தொடரும் ...
நன்றி !
மெய்திரு,
இமயகிரி
சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
22, புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு – இந்தியா
அகத்தியர் குருகுலம், யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T - 624003
தமிழ்நாடு – இந்தியா
செல் :9865430235 – 9095590855
– 9655688786 - 8695455549
1 comment:
விளக்கங்கள் அறிந்தேன்... தொடர்கிறேன்...
Post a Comment