இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Saturday, 22 September 2012

மூலம் - இரத்தமூலம் ( piles - bleeding piles ) கடுக்காய் தைலம் - செய்முறை

மூலம் - இரத்தமூலம் ( piles - bleeding piles )                                                கடுக்காய் தைலம் - செய்முறை 

காயத்தில் மூலங் கண்ட விதங்கேளு
பாயொத்த தீபனம் பரிந்தேயடக்கினும் 
மாயை மயக்க மலத்தையடக்கினும்
ஓயுற்ற குண்டலினுக்குட் புகும் வாயுவே

என்று திருமூலர் மூல நோயின் உற்பத்தியை விவரிக்கின்றார் தீவிரமான பசியைத் தாங்கி சரியான நேரத்தில் சாப்பிடாதிரு ந்தாலும் ,உடலுறவின் போது சிறுநீர்,மலம் அடக்குவதாலும் , ஒரே இடத்தில் ஆசனங்களில் அமர்ந்து தொழில் புரிவோர்க் கும் மூலாதாரம் எனப்படும் ஆசன வாய்ப்பகுதியில் வெப்பம் மிகுந்து இந்நோய் தோன்றுகிறது .

மற்றும் உணவில் நார்ச்சத்து வகைகளை குறைத்து உண்பதா லும் மலச்சிக்கல் ஏற்பட்டு மூலநோய் ஏற்படும்,அடிக்கடி நீர் அருந்தாமையினாலும் குடல் இளக்கமின்றி இந்நோய் தோன் றும். அதிக உடலுறவு ,அதிக காரமான உணவுஉண்போருக்கும் பெண்களின் குழந்தைப்பேறு கால சமயங்களில் குழந்தை வெளி வரும் போது முக்குவதாலும் மூல நோய் தோன்றும். 

மூலநோயை சித்தர்கள் 21-வகையாகப் பிரித்துள்ளனர். ஆங்கில மருத்துவத்தில் இதனை மூன்று வகையாகக் கூறு கின்றனர்.வெளிப்படையாக நமக்கு புலப்படுவதும் இவைகள் தான்.

1- உள் மூலம்,-ஆசன வாயின் உட்பகுதியில் குருத்து போல் வளர்வது.
2- வெளி மூலம்,-ஆசனவாயின் தசைப்பகுதிகள் பிதுங்கி வெளி வருவது .
3- இரத்த மூலம்,-மலம் வெளிவரும் போது இரத்தம் கசிவது.

கடுக்காய் தைலம் - செய்முறை 
தேவையான பொருட்கள் :
1 - பிஞ்சு கடுக்காய் - 250-கிராம் 
2 - சுத்தமான விளக்கெண்ணை - 1-கிலோ கிராம் 

செய்முறை ;

படம் ;- 1- பிஞ்சு கடுக்காய் 

படம் :- 2 - பிஞ்சு கடுக்காயில் -விளக்கெண்ணை -2-டீஸ்பூன் அளவு ஊற்றி                  பிசறி விடவும்.

படம் :- 3 - எண்ணையுடன் பிசறிய கடுக்காயை வாணலியில் போட்டு இளம் சூட்டில் வறுக்கவும். இது போன்று கடுக்காய் பெரிதாகும்.

படம் :- 4 - வறுத்த கடுக்காயை ஒன்றிரண்டாக இடித்து பொடியாகவும்.

படம் :- 5 - பிறகு மிக்சியில் போட்டு நன்கு பொடியாக்கி சல்லடையில் மிகவும் மென்மையான தூளாக சலித்து எடுக்கவும்.

படம் :- 6 - சுத்தமான விளக்கெண்ணையை - 400 -மிலி அளவு எடுத்து ஒரு பாடலில் ஊற்றவும்.

படம் :- 7 - அதில் கடுக்காய் பொடி - 100 - கிராம் அளவு எடுத்து சிறிது சிறிதாக தூவி ஒரு கரண்டியால் கலக்கவும் .

படம் : - 8-9-10 -   400-மிலி விளக்கெண்ணையில் - கடுக்காய் பொடி -100-கிராம் அளவும் போட்டு நன்கு கலந்து விடவும்.

சாப்பிடும் முறை :
தினமும் இரவு மட்டும் 1- அல்லது  2 -டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு தம்ளர் பாலில் கலந்து படுக்கும் போது சாப்பிடவும்.

காலையில் மலம் இலகுவாக வெளியேறும்.  மூலச்சூடு தணியும்.சிறிது நாட்கள்  தொடர்ந்து உண்டு வர மூலநோய் மற்றும் இரத்த மூலம் குணமாகும்.

மிகவும் எளிதான இந்த முறை சித்த மருத்துவத்தில் மருத்துவர்கள் மூல நோய்க்கு பரிந்துரை செய்யும் மிகவும் பிரபலமாக உள்ள "மூலக்குடார தைலம்"இது தான்.  

நன்றி !
இமயகிரி சித்தர்...
www.siddharprapanjam.org 
siddharprapanjam.blogspot.in  






















Thursday, 20 September 2012

ஆதளை மூலிகை - வெண்ணெய் -சூட்சும விளக்கம் - (மாயமாய் மறையும் வித்தை)

ஆதளை மூலிகை - வெண்ணெய் -சூட்சும விளக்கம்      (மாயமாய் மறையும் வித்தை)  



பொதுவாக சித்தர் நூல்களில் உள்ள கருத்துக்கள் பல அமானுஷ்யமும்,ஆச்சரியமும், இன்றைய விஞ்ஞானத்திற்கு சவால் விடக்கூடிய வகையில் நிறைய உள்ளன.ஆனால்  இவ்வகையான அரிய கலைகள் தீயவர்கள் கையில் கிடைத்து உலக மக்களுக்கு எதிராக பயன்படுத்தி விடக் கூடாது  எனக் கருதி சித்தர் பெருமக்கள் இவைகளை பரிபாசை சொற்களாக (மறை பொருளாக)வும்,பல்வேறு நூல்களில் இங்கொன்றும்,அங்கொன்றுமாக இவ்வகை இரகசியங்களை பிரித்து பதிவு செய்துள்ளனர்.

சித்தர்கள் தங்களிடம் சீடனாக  பணிந்து -12-லிருந்து -16-வருடம் வரை உண்மை சீடனாக தொண்டு செய்தவர்களுக்கே அரிய இரகசிய கலைகளை பயிற்றுவித்துள்ளனர்.
  
குரு சீட வழி முறையில் தீட்சை பெற்று சித்தர்  இலக்கியங்களின் வழி முறைகளைப் பின்பற்றுபவர்களுக்கு சித்தர் பாடல்களின் பரிபாசை  உண்மை விளக்கங்கள் மிக எளிதில் புரியும்.

கருவூரார் பலதிரட்டு -300-என்னும் நூலில் ஆதளை மூலிகையின் மூல மாக மாயமாய் மறையும் வித்தை ஒன்றை "கருவூரார் சித்தர்"குறிப்பிட்டு ள்ளார். இதன் விபரங்களை முந்தைய பதிவில் பதிவு செய்துள்ளோம்.

"கருவூரார் பலதிரட்டு"-300-என்ற இந்த நூல் "தாமரை நூலகம்"எஸ்.பி ராமச்சந்திரன் அவர்களால் -1994-ல் (முதல் பதிவு) பதிப்பிக்கப் பட்டது.

இந்த நூலின் மூலப்பிரதியையும்,ஓலைச்சுவடியையும் கொடுத்து இதற்கான விளக்க உரையும் எழுதிக் கொடுத்தவர் சேலத்தைச் சேர்ந்த சித்தர் இலக்கிய ஆய்வாளர் திரு கே.லட்சுமணன் என்பவர் ஆவர்.

இந்த நூலில் ஆதளை மூலிகையின் பால்,வெண்ணெய்,தேன் இந்த மூன்றையும் சேர்த்துக் கலந்து பொட்டு (திலதம்) வைக்க நமது உருவம் மறைந்து விடும் என குறிப்பிட்டுள்ளார்.இதில் உள்ள உண்மை என்ன வென்றால் வெண்ணெய் என்பது பசு வெண்ணையோ அல்லது எருமை வெண்ணையோ அல்ல இந்த வெண்ணெய் செய்முறையைப் பற்றி சிவபெருமானே அன்னை உமயவளுக்கு உபதேசித்ததாகும்.என்றால் இதன் மகத்துவம் எவ்வளவு அளப்பரியது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.இதன் செய்முறை மிகவும் கடினமானதாகும்.

மிகவும் அனுபவம் வாய்ந்த சித்தமருத்துவர்களின் துணையுடனோ அல்லது முப்பு,இரசவாத ஆய்வாளர்கள் துணையுடன் இருந்தால் மட்டுமே இந்த வெண்ணையை செய்து முடிக்க முடியும்.எனவேதான் இதனைப் பற்றிய முந்தய பதிவில் 

 குறிப்பு :-
இந்தப் பாடலில் சில பரிபாசை சூட்சுமங்கள் உள்ளது எனவே தக்கதொரு குருவின் வழிகாட்டுதலுடன் முயற்சி செய்யவும். 

என்ற விளக்கம் கொடுத்திருந்தோம்.இதனைப் புரிந்து கொள்ளாமல் சிலர் முக நூலில் (face book) எமது தளத்தில் விவாதம் நடத்தியுள்ளனர் . அவர் களும் புரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு . 

கருவூரார் பலதிரட்டு -300-ல் பாடல் -49-லிருந்து -53-ம் பாடல் வரை உள்ள ஐந்து பாடல்களை மிகவும் கவனமாகப் படித்து இதன்படி முறையாகச் செய்தோமானால் இந்த சிறப்பு வாய்ந்த வெண்ணையை செய்ய முடியும்.

இந்த வெண்ணையின் மகத்துவம்:

இதனைக் கடைந்து எடுக்கும் போது கையின் மேல் பட்டால் வெந்து விடும்.அதாவது திராவகம் (ஆசிட்)போன்று இருக்கும்.

இந்த வெண்ணையை நவ பாசாணங்களிலும்,உப்புச் சரக்குகளிலும் தடவி வாட்ட கட்டும்.(பாசாணக் கட்டு-உப்புக் கட்டு)

இந்த வெண்ணையுடன் பாதரசம் சேர்த்து அரைத்து எட்டு முறை சாரணை செய்தால் "ககன மணியாகும்"நமது உடலை உயரே தூக்கும் என்கிறார்.

இந்த வெண்ணையை எடுத்த பிறகு உள்ள நீரில்  நவலோகங்களை ஊரப் போட்டால் களிம்பு நீங்கி உயர்ந்த உலோகமாகும். 

இந்த வெண்ணையுடன் ,ஆதளை பால்,தேன் மூன்றும் சேர்த்து மத்தித்து (கடைதல்)நெற்றியில் பொட்டு வைக்க நமது உடல் மறைந்து பிறர் கண்களுக்கு தெரியாது.இந்த பொட்டுவை (திலதம்) அழித்து  விட்டால் நமது உருவம் மீண்டும் தோன்றும்.

முந்தய பதிவில் குறிப்பிட்ட "முன் சொன்ன வெண்ணை" இதுதான். 

இதர விபரங்களை இந்த நூலைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

நன்றி !

இமயகிரி சித்தர்...

சித்தர் பிரபஞ்சம் குழு -(face book)
siddharprapanjam@gmail.com                 
    

Tuesday, 4 September 2012

கரும் பூனை - மாயமாய் மறையும் வித்தை

கரும் பூனை - மாயமாய் மறையும் வித்தை 





  சித்தர்கள் நூலில் சில இடங்களில் மாயமாய் மறைவதைப் பற்றி குறிப் பிடுகின்றனர்.இதில் மூலிகைகள்,விலங்குகள் போன்றவற்றின் மூலமாக      மறையும் வித்தையை செயல் படுத்தும் முறைகள் உள்ளன.



கரும்பூனை - மறைவு வித்தை - பாடல் 

ஆகத்தான் கரும்பூனை தனைப் பிடித்தே 
அதனுடைய பீசமறுத் தெடுக்கும்போது 
ஏகத்தான் கருநீல வர்ணம்போலே 
இருக்குமப்பா குன்றுமணிப் பிரமாணந்தான்
போகத்தான் செம்பினிலே யடைத்துக் கொண்டு 
பூரணியாம் வாலைக்குப் பூசை செய்வாய் 
மகத்தான வாயிலிட உருத்தோன்றாது 
மகத்தான உருமாற்றம் சோலியில்லை

  சித்தர்கள் கரும்பூனை தனைப் பிடித்து அதனுடைய பீசத்தை அறுத்தெடுக்க வேண்டுமாம்.அதனுள் குன்றிமணி அளவில் கருநீல வர்ணத்தில் ஒரு மணி இருக்குமாம்.அதனை ஒரு செப்புக் குழாயில் அடைத்துக் கொண்டு பூரணி தேவியாகிய வாலை தெய்வத்தின் முன் வைத்து மந்திர உரு செபித்து பூசை செய்து இந்த செப்புக் குழாயினை வாயிலிட்டு அடக்கினால் நமது உருவம் மறைந்துவிடும்.இந்த மாய  வித்தை க்கு இணையில்லை என்கின்றார்.


குறிப்பு : சில விலங்குகளிடமும் அபூர்வ சக்திகள் உள்ளன என்பதனை அனைவரும் அறிந்து கொள்வதற்காகவே இது போன்ற பதிவுகள். 

நன்றி !

இமயகிரி சித்தர் ...

www.siddharprapanjam.org   



Monday, 3 September 2012

ஆதளை மூலிகை - மாயமாய் மறைய திலதம் -

ஆதளை மூலிகை - மாயமாய் மறைய திலதம் - 





சித்தர்கள் நூலில் சில இடங்களில் மாயமாய் மறைவதைப் பற்றி குறிப் பிடுகின்றனர்.இதில் மூலிகைகள்,விலங்குகள் போன்றவற்றின் மூலமாக      மறையும் வித்தையை செயல் படுத்தும் முறைகள் உள்ளன.

ஆனால் இவற்றை தக்கதொரு குருவின் துணையுடன் முயற்சி செய்து பார்க்க வேண்டுகிறோம்.இந்த முறை கருவூரார் பல திரட்டில் உள்ளவை.


ஆமாப்பா வெண்ணையிலே தேனைத்தேய்த்து
ஆதளையின் பால் கூட்டி அடைவாய்த் தேய்த்து 
ஓமப்பா திலதமிட தன்னைக் காணார் 
ஓங்கிநின்ற உருமாற்றம் ஒருவர் காணார் 
போமப்பா வெண்டிசையுங் கால் வேகங் கொண்டு 
பூமிதனில் மறைந்ததெல்லாம் பொலிவாய்க் காண்பர் 
வேமப்பா அண்டரண்டம் வழலை பட்டால் 
வேதாந்த பஞ்சகர்த்தா ளெனச்சொன்னாரே


விளக்கம் :

முன்பு கூறப்பட்ட வெண்ணையுடன் ,தேன் ,ஆதளை மூலிகையின் பால், இவைகளைக் கூட்டி மத்தித்து திலதமிட தன உருவம் மறைந்து விடும் . ஒருவரும் உருவத்தைக் காண முடியாது.

எட்டு திசையும் காற்றின் வேகத்தில் சென்று வரலாம்.மேலும் பூமியில் மறைந்துள்ள பொருட்களெல்லாம்,புதையலெல்லாம் கண்ணில் தோன் றும்.வழலைச் சுண்ணம் பட்டால் அண்டரண்டம் நீறிப் போகும்.

குறிப்பு :-

இந்தப் பாடலில் சில பரிபாசை சூட்சுமங்கள் உள்ளது எனவே தக்கதொரு குருவின் வழிகாட்டுதலுடன் முயற்சி செய்யவும். 

"ஆதளை மூலிகை" என்றால் என்ன என்று என்னிடம் ஏராளமானோர் தொடர்பு கொண்டு கேள்வியாகக் கேட்டுள்ளனர்.மேலும் இணைய தளங் களில் இந்த மூலிகையைத் தேடி வருகின்றனர் அவர்களுக்காகவே இந்த படங்கள் மற்றும் விளக்கங்கள்.மேலும் 

அடுத்த பதிவில் கரும் பூனையைக் கொண்டு மறையும் வித்தையைப் பற்றி விளக்கம் அளிக்கின்றேன் .   

நன்றி !

இமயகிரி சித்தர் ...        


  
  

பதிவுகளின் வகைகள்