இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Friday, 10 August 2012

நீர் மேல் நெருப்பு- (Neer mel neruppu) நோய்கள்-வறுமை -சத்துரு நீங்கி வளம் பெற

நீர் மேல் நெருப்பு -(NEER MEL NERUPPU)
நோய்கள்-வறுமை -சத்துரு நீங்கி வளம் பெற

நிரசையுள்ள  நீர்மேல் நெருப்பு  வாங்க  
நீ மகனே கன்னிநூல் காப்புக் கட்டே 
பிரசையென்ற தினைமாவுந்தேனும் நல்கி  
பெலிஎன்ன செஞ்சேவல் மந்திரமோ கேளு 
சரசக்கினிரூபி அக்கினியுச்சாரி சர்வக்கிரக
வானி   சர்வேசுவரி சுவாதி நாமா வென்று சாத்தே 
                                         கருவூரார் பல திரட்டு...


நீர்மேல் நெருப்பு என்னும் இம்மூலிகைக்கு கன்னி நூல் காப்புக் கட்டி 
தினை மாவும்,தேனும் கலந்து வைத்து,சிகப்பு சேவலை பலி கொடுத்து

"அக்கினி ரூபி அக்கினியுச்சாரி சர்வக் கிரகவாணி  சர்வேசுவரி  சுவதி நாமா"

என மந்திரம் செபித்து "நீர் மேல் நெருப்பு" மூலிகையின் வேரை குளிசம்
செய்து கட்டிக் கொள்ள நோய்கள் நீங்கும்,சத்துருக்கள் அடங்கிப்போவர்,
வறுமை நீங்கி செல்வ வளம் வந்து சேரும்.

நன்றி !

இமயகிரி சித்தர்...

8 comments:

Anonymous said...

nanbarae intha sediyin peyar neer mel nerrupa? intha sediyai pattri sirithu vilakkavum.

Hari Haran PS said...

idhu yenna ??

இமயகிரி சித்தர் said...

நண்பர்களே !

தட்டச்சு செய்வதில் தாமதம் ஆகி விட்டது
"நீர் மேல் நெருப்பு"மூலிகை விளக்கம் மேலே
பதிவு செய்யப்பட்டுள்ளது .

நன்றி !
இமயகிரி சித்தர்...

தேடல் said...

அய்யா,

நீர் மேல் நெருப்பு என்பதும் ஆகாய தாமரையும் ஒன்றுதானே ?

நன்றி

நந்தா


இமயகிரி சித்தர் said...

ஆகாயத்தாமரை என்பது அந்தரத்தாமரை ஆகும்.
இது குளம்,குட்டை,ஏரி போன்றவற்றில் நீர் பரப்பில்
மேலே மிதக்கும் செடியாகும்.

இங்கு நாம் குறிப்பிடும் நீர் மேல் நெருப்பு சதுப்பு நிலங்களில்
தரையில் வளர்வது ஆகும் .

நன்றி !

Anonymous said...

கன்னி நூல் காப்பு என்றால் என்ன ?

Unknown said...

Eepuli vandu meaning

இமயகிரி சித்தர் said...

//Ravichandran Murugesan//ஈப்புலி என்பது சிறிய பூச்சி இனமாகும். சாதரணமாக நாம் வசிக்கும் இடங்களி லேயே இதனைக் காணலாம்.

இது சித்தர் நூல்களில் வசிய ஈடு மருந்துகளில் சேர்க்கும் பொருள்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இப் பூச்சி நச்சுத்தன்மை வாய்ந்தது ஆகும்.எனவே இதனை ஈடு மருந்துகளில் சேர்த்தால் உடலில் பலவித தீமைகள் விளைவிக்கும். எனவே இந்திரகோபம், சுழல் வண்டு, ஈப்புலி, போன்ற உயிர் ஜீவன்களை சேர்ப்பது நல்லதல்ல.

வசியஈடு செய்ய ஏராளமான வசிய மூலிகைகள் உள்ளன அவைகளைக் கொண்டு முயற்சி செய்யுங்கள்.

நன்றி !
இமயகிரி சித்தர்...
www.siddharprapanjam.org

பதிவுகளின் வகைகள்