இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Friday, 3 August 2012

கொல்லிமலை கலிங்கம் ஓலைச்சுவடி -பாகம்- 2,


கொல்லிமலை கலிங்கம் ஓலைச்சுவடி

இரசவாத,காயகற்ப,அதிசயமூலிகைகள் ஆய்வு -அடையாளம் 
செய்முறை   விபரம் -பாகம்- 2



கொல்லிமலை கலிங்கம் ஓலைச்சுவடி

இரசவாத,காயகற்ப,அதிசய, மூலிகைகள் ஆய்வு -அடையாளம் செய்முறை   விபரம் -பாகம்- 2

புலியடி மூலி

கொல்லிமலை கிரிகை அரியலாம், புலியடி மூலி விபரம் சொல்லக் கேளு அரப்பளீசுவர் கோவிலுக்குப் பின்புறமாய் தென்கிழக்கு மூலையில் வழியே ஒரு நாழிகை தூரம் போனால் அங்கே ரெட்டைக்குண்டு மேடு உள்ளது. அது ரெட்டைக்குண்டு ஓடையென்று சொல்லப்படும்.

அந்த மேட்டில் முலைத்ததெல்லாம் புலியடி மூலிதான் அது குத்துச்செடி போல் முளைத்து ஒரு முள உயரமாயிருக்கும் செடி சுற்றிலும் கிளைகள் படர்ந்து பூமியில் சுற்றி படாந்துயிருக்கும். இலைகள் புலிப்பாதம் போல் இருக்கம். இலையைத் திருப்பிப் பார்த்தால் புலியைப் போலவே சாரை சாரையாய் கோடுகள் இருக்கும் இந்த இலை வெள்ளை, பச்சையாய் இருக்கும்.

இந்த இலையைப் பறித்து சாறு பிழிந்து கொண்டு, இரும்பைத் தகடு தட்டி சுருட்டி பழுக்கக் காய்ச்சி சாற்றில் மூன்றுமுறை துவைக்க (சுருக்கு கொடுக்க) செல்லு அரித்தது போல் இருக்கும் மீண்டும் மூன்றுமுறை சுருக்கு கொடுக்க இரும்பு தகடு கொஞ்சம் சிவந்து இருக்கும் அதை எடுத்துக்கொண்டு வெட்டி மூசையில் போட்டு வெங்காரம் கொடுத்து உருக்கி எடுத்து தகடு தட்டி காட்டு வெற்றிலையை அரைத்து தகடுக்கு கவசம் செய்து ஏழு சீலை மண் செய்து கெஜபுடத்தில் போட பவுனுக்கு மேலாய் மாற்று தோன்றும்.


முப்பிரண்டை
அந்தயிடத்துக்கு கீழ்புறமாய் சுற்றிப் பார்த்தால் முப்பிரண்டை காணம் அதைக் கொண்டு வந்து இடித்துச் சூரணம் செய்து திரிகடி அளவு பசும்பாலில் (காலை-மாலை) இருவேளை உண்ண அழியாத காயமாயிருக்கும், இதனை இடித்துப் பிழிந்த சாற்றில் இருபத்தியோரு முறை வெள்ளீயத்தை உருக்கிச் சாய்க்க வெள்ளியாகும்.

பேரிலவ விருட்சம்
கலிங்கத்திற்கு வடபுறமாய் ஒரு நாழிகை வழி தூரம் போனால் கற்பூர ஊசிக்கல்லும், நெருஞ்சிக் கல்லுமாய் இருக்கும் அதற்கு நேராக வடக்கே போனால் இரண்டு நாழிகையில் வடக்கப் புறமாய் ஒரு பேரிலவ விருட்சம் உண்டு. அதைச் சற்றி பனியாய் இருக்கும். ஜலம் மிகுதியாயிருக்கும், பாறை போல் தோன்றும் அவ்விடத்தில் மாதாக்கள் இருப்பார்கள்.

அவர்கள் பேசமாட்டார்கள் அவர்களைப் பணிந்து வணங்கினால், ஏன் வந்தாய் என்று கேட்பார்கள். உங்களிடம் பணிந்து தொண்டு செய்ய வந்தேன் என கூறினால், அள் கூர்ந்து ஆசிர்வாதம் செய்வார்கள். அதனால் இறைநிலை பேரின்பம் கிட்டும். அந்த உணர்வுடன் பேரிலவ விருட்சத்தைத் தழுவினால் உடனே சடைவிழும்.

அந்த கணமே எல்லா பதவியும் கிட்டும். காயசித்தியாகும், அவர்கள் பேசுவார்கள், சித்தர்களின் இரகசியங்களை உபதேசிப்பார்கள். அங்கே ஊரிக் கொண்டிருக்கும் ஜலத்தை சாப்பிட்டால் முதுமை போய் இளமையாகம்.


மாயா கொல்லி புகழை” அந்த பேரிலவ விருட்சத்திற்கு மேற்கு புறம் ஒரு நாழிகை வழியில் செல்ல ஒரு கரடு உண்டு அதில்மாயா கொல்லி புகழை”: உண்டு. அது தங்க நிறமாய் கூர்சம் புல் செடியைப் போல் (தர்ப்பை புல்) ஊசி மூக்கிலையாய் இருக்கும். அவ்விடம் போனால் மாய்கை, மயக்கம் உண்டாகும். அப்போது “என் தாயே லக்ஷ்மி சுவாகா என்று ஆயிரம் உரு செபித்து அப்பால் இலையை உருவித் தின்றால் காயசித்தியாகும். அறுபது காதம் பயணிக்க சித்தியாகும். எந்த ஊரை நினைத்தாலும் அவ்விடம் போய்ச் சேரலாம். சகல காரியமும் சித்தியாகும்.


எருமைகணை விருட்சம்” அதற்க மேற்கே பாலாறு போல வடகிழக்காய் தோன்றும் அந்த ஆற்றுக்கு வடக்கே போனால் ஒரு மடு உண்டு, அதிலே எருமை மரம் வெகு கூட்டம் உண்டு, அதைக் கீறிப் பார்த்தால் கருமையாய் இருக்கம். கையில் ஒட்டும், அந்தப் பட்டையை ஒரு பலம் எடுத்து கோசலம் விட்டு, “சோ, வா, வாக்கு சுவாக என்று 1028 உரு போட்டு 217 – சுற்று இடம் வலமாக சுற்றி வந்து கரநியாசம், அங்கநியாசம், பிராணபிரதிஷ்டை செய்து, உடனே அந்த மரத்தை துளைத்து கலயம் வைத்து மரத்துடன் சீலை மண் செய்து கட்டி விடவும், மூன்று நாழிகைக்குள் அந்த கலயத்தைப் பிரித்து அதில் வடிந்துள்ள பாலை ஒரு துட்டு எடையும், தேன் ஒரு காசு எடையும் மிளகு பொடி ஒரு பண விடையும் இந்த மூன்று மத்தித்து சாப்பிடவும், பின்பு  27-நாள் ஆன பிறகு சீயும், கோ, வா” – என்று 1028 – உரு போட்டால் உலகம் உள்ளவரை காயத்தோடு வாழ்ந்து இருக்கலாம்.                     

இந்த ஓலைச்சுவடியில் "சதுரகிரி மலையில்" உள்ள அபூர்வ மூலிகைகள் பற்றிய விபரம் ஏராளமாக உள்ளதுஅதை பாகம்-3,ல் தொடர்வோம்... 
 



நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி 
Cell No: 9865430235 - 8695455549
         


14 comments:

kuppusamy said...

நல்ல பதிவு இதை கொள்ளிமலியில் யாராவது முயற்சிசெய்து பார்த்துள்ளார்களா?

சித்தர் பிரபஞ்சம் said...

வணக்கம் ஐயா !

இது போன்ற அபூர்வ வகை மூலிகைகள் மற்றும் தாவர
வகைகளை சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் பல
இடங்களில் இவைகளின் அடையாளம் ,குணங்கள் மற்றும்
பயன்பாட்டு விளக்கங்களை அளித்துள்ளனர்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் குறிப்பிடப்பட்ட இவ்வரிய
மூலிகை ,தாவரங்கள் இன்றும் சதுரகிரி மலை,கொல்லி
மலை,பொதிகை மலை இவைகளில் காணக்கிடைக்கின்றது.

இதில் "ஜோதி விருட்சம்"இன்றும் சதுரகிரியில் இருக்கும்
ஆதார விளக்கத்தை ஜூலை மாத பதிவில் வெளியிட்டுள்
ளோம்.மேலும் "பூட்டைத்திறக்கும் அதிசய சஞ்சீவி மூலிகை"
எனும் தலைப்பில் எமது நண்பர் வர்ம ஆசான் ராஜேந்திரன்
அவர்கள் நிருபர்களின் முன்பு செய்து காண்பித்த செயல் விளக்
கங்களையும் ஆதாரங்களுடன் "சித்தர் பிரபஞ்சம்"ல் வெளியிட்
டுள்ளோம்.

எனவே சித்தர்கள் குறிப்பிடும் மூலிகைகளைக் கண்டறிந்து
இதில் கண்டபடி "காய கற்பம்"போன்றவைகளை சித்தி செய்ய
பெரும் முயற்சியும்,சித்தர்களின் ஆசியும் கிட்டினால் இவை
எல்லாம் சாத்தியமே !

நன்றி !
இமயகிரி சித்தர்...

ந.ராஜசேகர். said...

அன்புள்ள அண்ணன் இமயகிரி சித்தர் அவர்களுக்கு அடியேனின் நன்றிகள், தாங்களின் வலைபூ மூலம் பல தகவல்களை தெரிந்து கொண்டேன், ஆன்மிக தேடல் கொண்ட அனைவரும் தாங்களின் வலைதளத்தை படித்து பயனுற ஆண்டவனையும், குருவையும் வேண்டுகிறேன், தற்பொழுது இறைவனின் ஆசிர்வாததலும், குரு இட்ட பிட்சையலும் துபையில் பணி புரிந்துவருகிறேன், தாங்களுடன் தொடர்பில் இறுக விரும்புகிறேன் எனவே எனது ஈமெயில் முகவரிக்கு தாங்களின் அலைபேசி என்னை பகிர்ந்து கொண்டால் பாக்கியவான் ஆவேன்.
( தாங்களை போன்ற சித்தர் ஆசிர்வாதம் பெற்றவர்களை அண்ணன் என்று அழைப்பது தவறு என்றால் பொறுத்து அருளவும்)

குருவடிமை,
நமசிவாயம் ராஜசேகர்
rajasekarmvn@gmail.com

இமயகிரி சித்தர் said...

நண்பரே !

எமது தொலை பேசி விபரம் உங்கள் மெயிலில்
அனுப்பியுள்ளேன் .

நன்றி !
இமயகிரி சித்தர்...

Unknown said...

Sir, i want to know about that
what is the weight of one
varagan? and how much
distance is one kaatham?

இமயகிரி சித்தர் said...

நண்பரே !

உங்கள் கேள்வி ஒரு "வராகன்" எடை என்பது
எவ்வளவு ?
ஒரு "காதம்" என்பது எவ்வளவு தூரம் ?

1 - ஒரு வராகன் எடை என்பது :சுமார் -4-கிராம்
ஆகும் .அதாவது 32-குன்றி மணி எடை ஆகும்.

2 - பண்டைய கால நம் தமிழ் சித்தர்கள் நூல்களில்
"மலை வாகடம்" போன்ற நூல்களில் மலைகளில்
உள்ள அபூர்வ மூலிகைகளின் இருப்பிடம் பற்றி
கூறும் போது "அம்பிடு தூரம்" "கூப்பிடு தூரம்"
"ஒரு காத தூரம்" என்ற வார்த்தைகளின் படி கணக்
கிட்டுள்ளனர்.

இவைகளுக்கான தூர அளவு விபரம் இன்றைய நடை
முறையில் எந்த நூல்களிலும் இல்லை.

ஒரு "காத தூரம்" என்பது "பத்து மைல்" தொலைவாகும்
அதாவது "பதினைந்து கிலோ மீட்டர்" தூரம் ஆகும்.

நன்றி !
இமயகிரி சித்தர்...

Unknown said...

Mikka nandri nanbarae:)

தேடல் said...
This comment has been removed by the author.
இமயகிரி சித்தர் said...

ஆகாயத்தாமரை என்பது அந்தரத்தாமரை ஆகும்.
இது குளம்,குட்டை,ஏரி போன்றவற்றில் நீர் பரப்பில்
மேலே மிதக்கும் செடியாகும்.

இங்கு நாம் குறிப்பிடும் நீர் மேல் நெருப்பு சதுப்பு நிலங்களில்
தரையில் வளர்வது ஆகும் .

நன்றி !

Dhanasekar said...
This comment has been removed by the author.
Dhanasekar said...

வனக்கம் , நான் உங்களிடம் நிறைய பேச வேண்டும் என்று நினைக்கறேன் . உங்களுடன் பேச வாய்ப்பு உள்ளதா .............? maiil id : dhanasekar4friends@gmail.com, aadhavatraders@gmail.com

muthu said...

வனக்கம் , நான் உங்களிடம் நிறைய பேச வேண்டும் என்று நினைக்கறேன் . உங்களுடன் பேச வாய்ப்பு உள்ளதா .............? maiil id : nmrmuthu@gmail.com, nmrmuthu@gmail.com

muthu said...

வனக்கம் , நான் உங்களிடம் நிறைய பேச வேண்டும் என்று நினைக்கறேன் . உங்களுடன் பேச வாய்ப்பு உள்ளதா .............? maiil id : nmrmuthu@gmail.com, nmrmuthu@yahoo.com

Gopal said...

iyya, tamilil type seiyathatharku mannikavum. iyya நத்தைச்சூரி மூலிகை yenngu kidaikum. ithai patri padithathum athanmel arvam konden. nan malaysiavil valgiren. enethu mail id gopalk4ru@gmail.com. thayavu seuthu ennakku mail anupavum. Nandri..

பதிவுகளின் வகைகள்