செய்வினை ஏவலை விரட்டும் அதிசய தூபம் செய்முறை
ஓலைச்சுவடி அனுபவ முறை
நாம் வாழும் இவவுலகில் நல்ல எண்ணமும்,நல்ல குணமும் கொண்டவர்களை விட சுயநலம்,
பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி எண்ணம் கொண்டவர்கள் ஏராளம். இத்தகைய கொடூர எண்ணம்
கொண்டவர்கள் மத்தியில் நல்ல எண்ணம் கொண்டவர்கள் நலமாகவும், வளமாகவும் வாழ்வது மிக கடினம்தான்.
பொறாமை காரணமாகவும், குடும்பப்பகை காரணமாகவும், தொழில் போட்டி காரணமாகவும், சொத்து பிரச்சனை காரணமாகவும் ஒருவரை அழிக்கவும், முடக்கவும் மாந்திரீக முறையில் செய்வினை, ஏவல் செய்வது இன்று சாதாரணமாகி விட்டது. இந்த துன்மார்க்க
மாந்திரீக முறைகளை பணத்திற்க்காக செய்து கொடுக்கும் மாந்திரீகவாதிகள் பலர் இன்று நம்மிடையே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி எதிரிகளால் ஏவப்பட்ட செய்வினைகள்
மூலம் உடல் நலம், குடும்பவளம், தொழில் வளம், மன நலம் பாதிப்படைந்தவர்களை அதிலிருந்து
மீட்டு அனைத்து நல்ல வளங்களையும் கிடைக்கச் செய்யும் அற்புதமான ஒரு தூபமுறை
உள்ளது.இது அனுபவத்தில் கையாண்டு வந்த ஓலைச்சுவடி அனுபவ முறையாகும்.
செய்வினை ஏவல் சம்ஹார தூபம் செய்வதற்கு தேவையான
பொருட்கள்:
எட்டிவிதை, எட்டிப்பட்டை, எண்ணை பிழியும் செக்கு அடியில் உள்ள மண்,மஞ்சள், புங்கன்
கொட்டை, மாவிலங்கப்பட்டை, ஆயில்யப்பட்டை, வேப்ப மரத்தில் உள்ள காக்கை கூடு, ஆமை
ஓடு, குதிரைக்குளம்பு, பாம்பு சட்டை, மாட்டுக்கொம்பு, சிறுகீரை வேர், மூஞ்சூறு தோல், பழைய கம்பளி ரோமம், முசுருமுட்டை இவைகளை
ஒரே அளவில் எடுத்து சேர்த்து உரலில் இட்டு நன்கு இடித்துக் கொள்ளவும்.
இதற்கு சம எடை வெண் குங்கிலியம் சேர்த்துக்கொள்ளவும்.
பில்லி, சூன்யம், செய்வினை , ஏவல் பாதித்தவரை முதலில் மஞ்சள் அரைத்துப்
பூசி வெந்நீரில் குளித்த பின்னர் அவரை நிற்க வைத்து ஒரு தூப அகலில் அடுப்பு கரி
நெருப்பு இட்டு அதில் மேற்கண்ட செய்வினை
ஏவல் சம்ஹார தூப சூரணத்தை தூவி புகையை உடல்
முழுவதும் காட்டவும்.
பில்லி, சூன்யம், செய்வினை , ஏவல், சக்கரம் கட்டுதல், ஓலை கட்டுதல், வேர் பிடுங்கல், முதலியவற்றால் உண்டான
சூன்ய தொல்லைகள் அனைத்தும்
தீரும்.காலை மாலை என மூன்று
வேளைகள் போதும்.
இந்த தூபமுறை சூனியத்தால் பாதிக்கப்பட்ட தனி மனிதர்க்கு மட்டுமின்றி சூனியத்தால்
பாதிக்கப்பட்ட வீடு, தொழில்
ஸ்தாபனங்கள் வளம் பெறலாம்.
குறிப்பு : மேற்கண்ட பொருட்கள் சேகரிப்பதற்கு
சற்று சிரமமாக இருந்தாலும் செய்வினை ஏவலை விரைவில் சுலபமாக விரட்டக்கூடிய வல்லமை
கொண்டது.
நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்
அகத்தியர் குருகுலம் ஆன்மீக பீடம்
அகஸ்தியர் புரம் – சிறுமலை புதூர்
திண்டுக்கல் – 624003
சித்தர் வேதா குருகுலம்
NO. 6, புஷ்பக்நகர் –
A.M ரோடு
ஸ்ரீரங்கம் – P.O திருச்சி - 620006
Cell : 9865430235 – 9095590855
- 9655688786