இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Saturday, 14 October 2017

டெங்கு கொசுவை அழிக்கும் தீபாவளி பண்டிகை – பாகம் -3 –DENGUE

டெங்கு கொசுவை அழிக்கும் தீபாவளி பண்டிகை – பாகம் -3 –DENGUE






இன்றைய சூழலில் நம்மைச்சுற்றியுள்ள மிகப்பெரிய பிரச்சினை டெங்குநோய்  ஆகும். இதனால் தினமும் பலர் இறக்கின்றார்கள் என்ற செய்தி தினசரி இதழ் களிலும், தொலைக்காட்சிகளிலும் வருவதைக்காண்கின்றோம். இதனைக்  கட்டுப்படுத்த நமது தமிழக அரசும் மிகவும் தீவிரமாக போராடி வருகின்றது. மேலும் டெங்கு நோய் உருவாகாமல் தடுப்பதற்கான விழிப் புணர்வு பிரச்சார மும் செய்து வருகின்றது.ஆனாலும் நோயின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

இயற்கை சுற்று சூழல் ஆர்வலர்கள் பலர் தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கும் பட்டாசுகளினால் ஏற்படும் புகையினாலும், சப்தத்தினாலும்  பூமியில் மிகவும் மாசு ஏற்படுகின்றது என்று கூறுகின்றனர்.ஆனால் உண்மை என்னவென்றால் தீபாவளி பண்டிகையின் போது ஏற்படும் மாசுவினால் மிகப்பெரிய நன்மையே உண்டாகின்றது  என்பது மிகப்பெரிய உண்மையா கும்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் சூட்சுமம் தீபாவளி பண்டிகையில் உள்ளது.

தீபாவளி பண்டிகை என்பது என்றோ இறந்து போன நரகாசுரனை அழித்ததன் நினைவாக கொண்டாடும் பண்டிகை அல்ல.ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட மாதங்களில் தோன்றி மனிதர்களை வாட்டி, வதைத்து மிகவும் துன்பத்தில் ஆழ்த்தும் நரகாசுரனை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அழிக்கும் பண்டிகைதான் தீபாவளி ஆகும். 

நரகாசுரன் என்பது நாம் புராணக்கதைகளில் படித்து தெரிந்துள்ள ஒரு அரக்கன் வடிவம் கொண்ட அசுரன் அல்ல.மலேரியா, சிக்குன் குனியா, டெங்கு, போன்ற வைரஸ் காய்ச்சலை மனிதர்களிடம் உருவாக்கும் கொசு க்கள்தான் என்பதே மாபெரும் அதிசய உண்மையாகும்.

இதன் விபரங்களை சென்ற 2012,ம் வருடத்திலேயே நமது சித்தர் பிரபஞ்சம் இணையதளத்தில் 2,பதிவுகளாக :-

தீபாவளி பண்டிகை  ஆன்மீக விளக்கம் – பாகம் -1

தீபாவளி பண்டிகை -பாகம் -2 -அறிவியல் ஆய்வு விளக்கம் 

என்ற தலைப்புகளில் மிகவும் விபரமாக பதிவு செய்துள்ளோம்.இந்த இரண்டு பதிவுகளிலும் ஏராளமான அரிய உண்மைகள் பதிவு செய்துள்ளோம்.

கொசு என்ற சிறு பூச்சி இனம் பலகோடி வருடங்களாக மனிதர்கள், மற்றும் விலங்குகளின் இரத்தத்தை குடித்து வாழ்ந்து வரும் இனமாகும்.கொசுக்களை அழிப்பது என்பது சாதாரண காரியமல்ல.கொசுவர்த்தி சுருள்களாலும்,திரவ மருந்துகளாலும்,புகை போடுவதாலும் இவை அழிவதில்லை.கொசுக்களை விரட்ட மட்டுமே பயன்படுகின்றது.கொசுக்களை அழிக்க பல்வேறு நாடுகளி லும் தீவிரமாக ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றது. 

தீபாவளி பண்டிகைக்கு, கொசுக்களை அழிப்பதற்கு மிகவும் பங்குண்டு என்பதை இப்போது பார்ப்போம்.

கொசுக்கள் உற்பத்தி ஆவதில் மூன்று கட்டங்கள் உள்ளது.
1,  முட்டை பருவம்
2, புழு பருவம்
3, கொசு பருவம் 

கொசு முட்டையிட்டு, குஞ்சு பொறித்து, கொசுவாக மாறுவதற்கு தண்ணீர், நீர் நிலைகள் தேவை.எனவே கொசுக்கள் தன் இனத்தைப் பெருக்குவதற்கு புரட்டாசி, ஐப்பசி போன்ற மழை காலங்களில் அங்காங்கே தேங்கி நிற்கும் நீர் நிலைகளில் முட்டை இடுகின்றது.பின்பு முட்டையிலிருந்து புழுவாகி, பின்பு இறக்கை முளைத்து கொசுவாக மாறுகின்றது.

1, ஐப்பசி மாதத்தில் பெய்த மழைநீரில் மற்றும் சாக்கடை நீர் நிலைகளில் கொசு இட்டுள்ள முட்டைகள்  பட்டாசு, வெடிகளால் ஏற்படும் சப்தத்தினால் அதிர்ச்சி ஏற்பட்டு முட்டை பருவ கொசுக்கள் அழிகின்றன.

2, வெடியில் உள்ள கந்தகம், வெடியுப்பு, அலுமினியம் போன்ற வெடி மருந்துகளுடன் சுற்றப்பட்ட காகிதங்கள்   வெடிகள் வெடித்தவுடன் நாலாபுற மும்  சிதறி சாக்கடை மற்றும் தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரில்  வெடி மருந்து தன்மையுடன் காகிதங்கள் கலந்து புழு பருவ கொசுக்கள் அழிகின் றன.

3, புஸ்வானம், சங்குசக்கரம், கம்பிமத்தாப்பு, மற்றும் வெடிகள் வெடித்தவுடன் வெளியேறும் புகைகளினால் வீடுகளிலும், வீட்டை சுற்றியுள்ள செடி,கொடி,மரங்களில் மற்றும் மறைவான இடங்களில் மறைந்துள்ள கொசுக்கள் மடிகின்றன. இவ்வகை வெடிமருந்து புகையினால் மட்டுமே கொசுக்கள் இறக்கின்றன என்பது மிகப்பெரிய உண்மையாகும்.

தீபாவளிப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிய பின்பு அந்தப் பகுதிகளில் "கொசுக்கள் மற்றும் பூஞ்சைகள்" அழிந்து,அதன் தாக்கம் குறைந்து இவைகளால் ஏற்படும் நோய்களின் கொடுமையும் வெகுவாக குறைந்திருப்பதை கவனித்துப் பாருங்கள் உண்மை புரியும்

பாகம் -1 to 3  - இந்த மூன்று பாகங்களையும் ஆழ்ந்து கவனித்துப் படித்து இதில் கூறிய முறைகளின் படி தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்து ஆரோக்யமாக வாழ வேண்டுமென "சித்தர் பிரபஞ்சம்" இணைய தளம் சார்பாக இறைவனின் அருளையும், சித்தர்களின் ஆசியையும் வேண்டி வாழ்த்துகின்றோம். 


நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
22, புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு இந்தியா

அகத்தியர் குருகுலம், யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T - 624003
தமிழ்நாடு இந்தியா

செல் :9865430235  9095590855 – 9655688786 – 8695455549 

பதிவுகளின் வகைகள்