பாரம்பரிய மூலிகை மருத்துவ கருத்தரங்கம் 8 - 1- 2014 – Joseph’s College Trichy
பாரம்பரிய மூலிகை மருத்துவ கருத்தரங்கம் 8 - 1- 2014 – Joseph’s College
Trichy
திருச்சி ஜோசப் கல்லூரியில் [ St.Joseph’s College - Trichy
] 8/1/2014 ம் தேதியன்று பாரம்பரிய மூலிகை மருத்துவ
கருத்தரங்கம் நடை பெற்றது.
நோயற்ற சமுதாயம் உருவாகவும், தாவரவியல், மூலிகைகளை பயிலும்
மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் அறிந்து பயன்பெறும் வகையில் பாரம்பரிய
மூலிகை மற்றும் சித்த மருத்துவர்களை ஒருங்கிணைத்து, மூலிகைகளை நோய்களுக்கு பயன்படுத்தும் அனுபவ முறைகளை அறிந்து கொள்ளவும்,
தமிழகத்தின் பாரம்பரிய மூலிகை அறிவியலை பதிவு செய்து உலகப்பார்வைக்கு
கொண்டு செல்லவும், திருச்சி ஜோசப் கல்லூரியின்"செப்பர்டு- விரிவாக்கத்துறை" சார்பாகவும் மற்றும் "இந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மற்றும்
முப்பு ஆய்வாளர்கள் கூட்டமைப்பின்" மூலமாக பாரம்பரிய மூலிகை மருத்துவ கருத்தரங்கம் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் மருத்துவ மலர் வெளியீடு,பாரம்பரிய சித்த மருத்துவர்களின் கலந்தாய்வு,மூலிகை பண்ணை அபிவிருத்தி திட்டம், மருத்துவ
மூலிகைகளை கண்டறிந்து அதன் பயன்களை பதிவு செய்தல், மற்றும்
அவைகளை மக்கள் பயன் பாட்டிற்காக கொண்டு செல்லும் திட்டங்கள்
போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இதில் நூற்றுக்கணக்கான பாரம்பரிய சித்த
மருத்துவர்கள் மற்றும் மூலிகை ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மற்றும் முப்பு ஆய்வாளர்கள்
கூட்டமைப்பின் நிறுவனர், பொதுச்செயலாளர் Dr.S.நாகராஜ்
B.Sc., R.M.P., அவர்கள், மற்றும் திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் Dr.து.சீனிவாசன் B.I.M., அவர்கள்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
கருத்தரங்கில் வெளியிடப்பட்ட பாரம்பரிய சித்த மருத்துவர் களின் அனுபவ மருத்துவமுறை இரகசியங்கள்
அடங்கிய மூலிகை மருத்துவ
மலர் பற்றிய விரிவான விபரம் அடுத்த பதிவில்.....
நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி -5 - T.N – India
cell : 9865430235 - 9095590855