சஞ்சீவி மலை ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம் பூமி பூஜை அழைப்பிதழ்
சஞ்சீவி மலை ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம் பூமி பூஜை அழைப்பிதழ்
அன்புடையீர் !
நிகழும் மங்களகரமான விஜய வருடம் தை மாதம் 12 -ம் தேதி ( 25-01-2014 ) சனிக்கிழமை ,விசாக நட்சத்திரமும்,சித்த யோகமும் கூடிய சுபயோக சுப தினத்தில் அன்று காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் ஆச்சாரிய குடில்
வாஸ்து பூஜை சீரும் சிறப்புமாக நடை பெற உள்ளதால் பக்தர்களும், அன்பர்களும் வருகை தந்து குருவரு ளும், திருவருளும்,சித்தர்கள் ஆசியும் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை
[சஞ்சீவி மலை] மேல் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒடுக்கம்
தலச்சோலையில் வற்றாத ஜீவநதியாக தவழ்ந்தோடிவரும் சொர்ணதீர்த்தக் கரையில்
அமைந்துள்ளது.
நமது ஆஸ்ரமத்தில் கட்டமைப்பை விரிவு படுத்தவும், இப்பிரபஞ்சத்தின் ஆற்றலை பரிபூரணமாக பெற
பிரமீடு தியானக்குடில்,ஆச்சாரியக் குடில்,அன்னதானக் கூடம் போன்றவைகள் அமைய உள்ளது.
ஆகவே பக்தர்களும்,அன்பர்களும்,ஆன்மீகச் சான்றோர்களும் இந்த அரிய
ஆன்மீக வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள, ஸ்ரீ அகத்தியர்
பெருமானின் ஆஸ்ரமத்திற்குச் செய்யும் தொண்டாக தங்களால் முடிந்த கைங்கரியம்
செய்து இறைவனின் திருவருளும், சித்தர்களின் ஆசியும்,ஆச்சாரியரின் குருவருளும், பெற்று வாழ்வாங்கு வாழ
வேண்டுகின்றோம்.
குறிப்பு : நமது "சித்தர் வேதா குருகுலம்" மூலமாக சித்தர் கலைகளின் உயர்நிலைப் பயிற்சிகள் ஸ்ரீ
அகத்தியர் ஆஸ்ரமத்தில் இறைவன் அருளுடன்,சித்தர்கள் ஆசியுடன் வழங்கப்பட உள்ளது.மேலும் அகத்தியர்
பெருமான் தனது உத்தம சீடராகிய புலஸ்தியருடன் தவம் செய்து வாழ்ந்த வனம் இங்குதான் அமைந்துள்ளது.
நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி -T.N
cell : 9865430235 - 8695455549