இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Sunday, 25 November 2012

புல்லாமணக்கு மூலிகை -வசியம் -Pullamanakku herbal -Vasiyam

புல்லாமணக்கு மூலிகை  வசியம்-  Pullamanakku Herbal Vasiyam







புல்லாமணக்கு மூலிகை  வசியம்-  Pullamanakku Herbal Vasiyam

சித்தர்கள் கண்டறிந்த அபூர்வ  மூலிகைகளில் ஒன்றுதான் புல்லாமணக்கு எனும் அதிசய மூலிகையாகும்.இது பல்வேறு வகையான வசியம் செய்ய உத வுகின்றது.

இம் மூலிகையினைக் கொண்டு ஆண் வசியம், பெண் வசியம், தூப வசியம், (புகை),  வசிய மை, வசிய ஈடு, ஈடு மருந்து முறிவு,போன்ற ஏராளமான வசிய வேலைகளுக்கு மாந்திரீகவாதிகள் காலம் காலமாக பரம ரகசியமாக கையா ண்டு வருகின்றனர்.

இன்றும் கிராமப்புறங்களில் மற்றும் நகர்ப்புறங்களில் இதனைப்பயன்படுத்துபவர்கள்  பரவலாக உள்ளனர்.

இம்மூலிகையின் பயன்பாடுகள் பற்றி சித்தர் நூல்கள், மாந்திரீகம்,மாயாஜால வித்தைகள் போன்ற நூல்களில் உள்ளது.என்றாலும் இதனை அனுபவ முறையில் கையாண்டு வெற்றி பெற நன்கு தேர்ச்சி பெற்ற ஒரு குருவின் வழிகாட்டுதல் கண்டிப்பாகத் தேவை.இதனை அனைவரும் அறிந்து கொள்ளும்  ஒரு அரிய தகவலாகவே பதிவு செய்கின்றோம். மேலும் இம்முறைகளை  கையாள விரும்புபவர்கள் சுயநலத்திற்கு என்றில்லாமல் பொது நலத்தையும் அறிந்து பயன்படுத்த வேண்டுகிறோம்.

வசிய தூபம் முறை 

1-நிலம்புரண்டி வேர் 2-புல்லாமணக்கு கிழங்கு 3-தொட்டால் வாடி வேர் 4-தொட்டால் சுருங்கி வேர் இவைகளை அம்மியில் இட்டு "பேய் கரும்பு"சாறு விட்டு  5 மணி நேரம் அரைத்து கடலை பிரமாணம்   அளவு உருட்டி காய வைத்து பாட்டலில் பதனம் செய்யவும்.இதை வேண்டும் போது ஒரு உருண்டை எடுத்து சாம்பிராணி கொஞ்சம் சேர்த்து தூபமாக(புகையாக)போட்டால் புகை பட்டவர்கள் எல்லாம் வசியமாவர்கள்.

ஆண், பெண் வசிய ஈடு மருந்து

1-சுழல் வண்டு  -42 -குளியானை -33 -இந்திரகோபம் -104 –புல்லாமணக்கு கிழங்கு -55 -கோவை விதை -106 -பொன்னூமத்தை விதை -307 –தகரை விதை -108 -தொட்டால் வாடி வேர் -39 -மருளூமத்தை விதை -5 இவை களை அம்மியில் இட்டு பேய்க் கரும்புச் சாறு விட்டு 10-மணி நேரம் அரை த்து குன்றிமணி பிரமாணம் குளிகை செய்து உலர்த்தி ஒரு பாட்டலில் பதனம் செய்யவும்.வேண்டும் போது ஒரு குளிகை எடுத்து தனது ரத்தம் சேர்த்து தின் பண்டங்களில் கலந்து கொடுக்க வசியம் ஆவர். இணைபிரியாத தம்பதிகளா வார்கள்.

வசிய ஈடு மருந்து முறிவு 

சுயநலத்தின் காரணமாக ஒருவரின் பிடியில் வசிய மருந்தினால் உள்ளஒருவரை அதன் பிடியிலிருந்து மீட்டுக் கொண்டுவரவும் இம் மூலிகை "புல்லாமணக்கு"உதவுகின்றது.

புல்லாமணக்கு கிழங்கு மூன்று எடுத்து நெய் விட்டு வறுத்து உண்ணவும்.இது போல் மூன்று நாள் காலை மாலை ஆறு வேளை சாப்பிட ஈடு மருந்தின் வேகம்முறிந்து தனது சுயநிலையை அடைவார்கள்.


நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
No, 22, பாரத் கார்டன்,
புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு – இந்தியா

அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T – 624003
தமிழ்நாடு – இந்தியா

செல் :98654302359095590855 - 9655688786







Sunday, 11 November 2012

தீபாவளி பண்டிகை -பாகம் -2 -அறிவியல் ஆய்வு விளக்கம் -Deepavali-2

தீபாவளி பண்டிகை -பாகம் -2 -அறிவியல் ஆய்வு விளக்கம் 







இந்தியா முழுவதிலும்  அனைத்து மாநிலங்களிலும் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது.மேலும் பல நாடுகளிலும் கூட கொண்டாடப் படுகின்றது.

தீபாவளிப் பண்டிகை புராணங்களில் கூறப்படும் "நரகாசுர வதம்"என்பதற்கு மட்டுமல்லாமல்,மகா லட்சுமி அவதரித்த தினமாகவும்,குபேரன் சிவபெரு மானை வழிபட்டு சித்தி அடைந்த தினமாகவும், இமாச்சலத்தில் கோ பூஜை யும்,உத்திரப்பிரதேசத்தில் அன்னபூரணி வழிபாடும்,வங்காளத்தில் தாம்பூல திருவிழா ,துர்கா பூஜாவாகவும்,குஜராத்தில் குபேர பூஜையாகவும், மும்பை யில் லட்சுமி பூஜையாகவும் கொண்டாடப் படுகின்றது.

பொதுவாக நமது இந்து மத புராணங்களிலும்,இதிகாசங்களிலும்  அரக்கர் கள்,அசுரர்கள் வாழ்ந்தார்கள் என்பதை குறிப்பிடுகிறார்கள் அவர்களின் தோற்றமும் உருவமும் மிகப் பிரமாண்டமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள் ளனர். இக்கருத்தை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் இருக்கும்.

உண்மை என்னவென்றால் மனிதகுலத்தின்,மக்களின் நல்வாழ்விற்கு தீங்கு விளைவிப்பவைகள்  எதுவோ அதைத்தான் அசுரன்,அரக்கன் எனக் குறிப்பி ட்டுள்ளனர்.

இப்போது தீபாவளியைப் பற்றி விளக்கங்களைப் பார்ப்போம்.மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்க ளில் ஒன்றான வராக அவதாரத்தில் தோன் றிய  ஒரு அசுரனை பல்லாயிரம் வருடங்களுக்குப் பிறகு கிருஷ்ண அவதாரத் தில் தான் அழித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.இக்கருத்தில் ஒரு மிகப்பெரிய உண்மை உள்ளது.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா  நரகாசுனை அழித்ததைக் கொண்டாடும் விழாவே  தீபாவளி என நினைத்துக் கொண்டு இருக்கின்றோம்.உண்மை அதுவல்ல ஒவ்வொரு வருடமும் மக்கள் குலத்தை பெரும் துன்பத்தில் ஆழ்த்தும் நரகாசுரனை அழிக்கும் விழாவே தீபாவளி ஆகும்.

நரகாசுரன் விளக்கம் :-  நரக - கொடிய  + அசுரன் - வேதனைஅளிப்பவன் 

நரகாசுரன் வேறு விளக்கம் :- நரன் - மனிதன் +அசுரன் - கொடுமை செய்பவன் 

எனவே மனிதர்களுக்கு கொடும் துன்பம் செய்பவைகளை அரக்கன்,அசுரன் என வர்ணித்துள்ளனர்.

இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு நம் இனத்தினரை பெரும் துன்பங்களுக்கு உட்படுத்தி கொடுமை செய்து கொண்டிருக்கும் கொடிய அசுரனான "நரகாசுரனை"  உங்களால் அறிந்து கொள்ள முடிகின்றதா ?நரகாசுரன் வேறு யாருமல்ல "கொசுக்கள்"தான்.இது வேடிக்கையாக சொல்லப்படும் கருத்தல்ல.மிகப்பெரிய உண்மையும் அதுதான்.பாகம் -1-ல் உள்ள புராணக்கதையை படித்து அதன் உள்அர்த்தத்தை ஆழ்ந்து கவனியு ங்கள் உண்மை விளங்கும்.

இன்று அரசாங்கமும் இந்த அசுரனை அழிப்பதற்காகவும்,இவனால் மக்களு க்கு ஏற்படும் துன்பங்களை போக்கவும் பல இலட்சக்கணக்காக பணம் செலவழித்து மக்களுக்கான விழிப்புணர்வும்,டெங்கு,மற்றும் வைரஸ் நோய்க ளைப் போக்க மருந்துகளும் அளித்து வருகின்றது.

இது போன்ற பருவகால கொடிய  நோய்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க நம் முன்னோர்களால் நமக்கு நாமே திட்டமாக தோற்றுவிக்கப்பட்டதுதான் தீபாவளித் திருநாள்.   

பருவ காலங்களில் ஒன்றான "ஐப்பசியில் அடைமழை" எனும் இம்மாதத்தில் தான் கொடிய நோய்களான மலேரியாடெங்கு, சிக்குன் குனியா,வைரஸ் காய்ச்சல் மற்றும் மழை கால நோய்கள் போன்றவைகளுக்கு மக்கள் பெருவாரியான துன்பங்களுக்கு ஆட்பட்டு உயிர் இழக்கும் அபாயத்திற்கு ஆளாகின்றனர்.

ஐப்பசி மாதத்தில் பெய்யும் தொடர் மழையால் வீட்டின் சுவர்ப்பகுதியிலும், வீட்டின் உட்புறங் களிலும்,ஏராளமான் பூஞ்சைகள் தோன்றி படிந்திருக்கும், இவை நாம் உடுத்தும் துணிகளிலும் படிந்து அதன் மூலம் உடலின் தோல் பகுதிகளில் படிந்து வைரஸ் நோய்களை தோற்றுவிக்கும்.

மேலும் மழை பெய்து தேங்கிய நீரில் கொடிய நோய்களைத் தோற்றுவிக்கும் பல்வேறு வகை கொசுக்கள் உற்பத்தியாகும்.இவைகளைத் தான் "அசுர சக்தி"எனக்குறிப்பிட்டு இவைகளை அழித்தால் தான் மனித குலம் நிம்மதியா கவும், சந்தோசமாகவும் வாழமுடியும் என்பதால் இவைகளை அழிக்கும் சூட்சுமத்தைக் கொண்ட ஒரு விழாவாக, தீபாவளி பண்டிகையை நம் முன்னோர்கள் வடிவமைத்தனர்.


இதற்கு மூன்று வகையான சுத்திகரிப்பு அவசியம் என்பதை உணர்ந்தனர்.
1 - உடல் சுத்திகரிப்பு 
2 - வசிக்கும் வீடு  சுத்திகரிப்பு 
3 - நம்மை சுற்றியுள்ள பகுதிகள் சுத்திகரிப்பு 

உடல் சுத்திகரிப்பு :- எண்ணைக் குளியல் 
உடல் சுத்திகரிக்க நாம் முதல் பாகத்தில் குறிப்பிட்ட "மிளகு தைலம்"தேய்த்து வெந்நீரில் குளித்தல் இதனால் உடலில் தோல் பகுதிகளில் தோற்று நோய் பூஞ்சைகளை நீக்கி,தோலில் இரத்த ஓட்டத்தை சீர்படச் செய்கின்றது. உடலை எப்படி முறையாக சுத்திகரிக்க வேண்டுமென பாகம் -1ல் மிகத் தெளிவாக விளக்கமளித்துள்ளோம்.  

வசிக்கும் வீடு சுத்திகரிப்பு :- அகல் தீபம் 
தீபாவளி எனும் சொல் "தீப - ஆவளி"  என்ற இரண்டு வார்த்தைகள் இணைந் தது.ஆவளி என்றால் வரிசை, வரிசையாக தீபங்களை ஏற்றி வழிபடுதல் ஆகும்.

நிறைய அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வீடு முழுக்க வைத்தல்.இதனால் ஏற்படும் வெப்பம், ஒளியினால் வீட்டிலுள்ள  பூஞ்சைகள் அழிகின்றன.இதை நீங்கள் அனுபவப் பூர்வ மாகவே உணரலாம்.மழை காலங்களில் வீட்டினுள் துணிகளில்,சுவர்களில் ஒரு துர்வாசனை இருக்கும் போது நிறைய எண்ணை தீபங்களை வீட்டின் அறைகளில் வைத்துப் பாருங்கள் துர்வாசனை அகன்று விடும்.

நம்மைச் சுற்றியுள்ள பகுதிகள் சுத்திகரிப்பு :- பட்டாசு ,வெடி வெடித்தல் 
பட்டாசுகள்,வெடிகளின் மூலமாக போன்றவைகள் மூலமாக அதாவது வெடிப்பொருட்களில் உள்ள மருந்துகளான வெடியுப்பு,கந்தகம்,அலுமினிய தூள்,போன்றவைகள் வெடிக்கும் போது அதில் வெளி வரும் புகை,சப்தம், தெரித்து விழும் மருந்துகள் மூலமாக சாக்கடை,நீர் தேங்கும் குழிகள்,செடி, கொடிகளில்,மரங்களில் மறைந்து வாழும் அனைத்து வகை கொசுக்களையும் அழிக்க தீபாவளி பண்டிகை ஒரு நல்ல காரணமாக உள்ளது. 


தீபாவளிப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிய பின்பு அந்தப் பகுதிகளில் "கொசுக்கள் மற்றும் பூஞ்சைகள்" அழிந்து,அதன் தாக்கம் குறைந்து இவைகளால் ஏற்படும் நோய்களின் கொடுமையும் வெகுவாக குறைந்திருப்பதை கவனித்துப் பாருங்கள் உண்மை புரியும்


பாகம் -1-to -2  -இந்த இரண்டு பாகங்களையும் ஆழ்ந்து கவனித்துப் படித்து இதில் கூறிய முறைகளின் படி தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்து ஆரோக்யமாக வாழ வேண்டுமென "சித்தர் பிரபஞ்சம்" இணைய தளம் சார்பாக இறைவனின் அருளையும், சித்தர்களின் ஆசியையும் வேண்டி வாழ்த்துகின்றோம். 

நன்றி !

மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
22, புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு இந்தியா

அகத்தியர் குருகுலம், யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T - 624003
தமிழ்நாடு இந்தியா
செல் :9865430235  9095590855 – 9655688786 – 8695455549



Saturday, 10 November 2012

தீபாவளி பண்டிகை ஆன்மீக விளக்கம் – பாகம் -1 -Deepavali -1

தீபாவளி பண்டிகை  ஆன்மீக விளக்கம் – பாகம் -1






தீபாவளி பண்டிகை  ஆன்மீக விளக்கம் – பாகம் -1

இந்து மத கலாச்சார பழக்க,வழக்கங்களில் சாஸ்த்திரம்,சம்பிரதாயம்,
திருவிழாக்கள்,பண்டிகைகள்,போன்றவைகள் மனிதகுல வாழ்க்கையின் 
நல் வாழ்விற்காக உருவாக்கப்பட்டவைகள் ஆகும்..

ஆனால் அதன் உண்மையான அறிவியல் விளக்கங்களை மறைத்து இதிகாசம்,புராணங்கள் போன்ற கதைகளாக வடித்துள்ளனர்.இதனால் காலப்போக்கில் இதன் பெருமைகளும்,மகத்துவங்களும் மறைந்து போவதற்கு இடமுண்டு.    

இதில் இன்றைய கால சூழ்நிலையில் தீபாவளி பண்டிகையைப் பற்றி அறிவியல்பூர்வமான விளக்கங்கள் அளிப்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தில் 
இரண்யாசனை வதம் செய்து பூமாதேவியைக் காப்பாற்றி பூமியை வராகப் 
பெருமான் தன "தெற்றுப் பல்லால்" தூக்கி நிறுத்திய போது அவர் பல் பட்ட 
இடத்திற்கு "காம ரூபம்" என பெயர் வந்தது.

பூமாதேவிக்கும்,வராக மூர்த்திக்கும் பிறந்தவன் தான் "நரகாசுரன்" இவன் 
பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்து "அசுர பலம்"பெற்றான்.பின்பு 
இந்திரனையும் வென்றான்.அதன் பின் காம ரூபத்தில்"இருந்து கொண்டு 
மக்களை மிகவும் துன்புறுத்தி பெருத்த அழிவை ஏற்படுத்தி வந்தான்.

நரகாசுரனை யாருமே அழிக்க முடியாததால் பல்லாயிரம் வருடங்களாக 
இவனால் நரக வேதனையை அனுபவித்து வந்த மக்கள் "கிருஷ்ணவதார த்தில்" கிருஷ்ண பகவானிடம் முறையிட அவர் சத்தியபாமாவுடன் புறப்பட்டுச் சென்று கடுமையாக யுத்தம் செய்ததில் நரகாசுரன் மடிந்தான்.

பூமா தேவி தன்  மைந்தன் இறந்த தினத்தை மக்கள் கடை பிடிக்க வேண்டும்.
அதே சமயம் அதை "துக்க தினமாக" இல்லாமல் "பண்டிகை தினமாக"
கொண்டாட வேண்டுமென வரம் வாங்கினாள்.எனவே நரகாசுரன் இறந்த  தினம் ஐப்பசி மாதத்தில் கிருஷ்ண பட்ச சதுர்த்தசியில் சூரிய உதய காலத் தில் "நரக சதுர்த்தி"யாகக் கொண்டாடும் படி கேட்டுக்கொண்டாள்.

பொதுவாக எண்ணெய் குளியல் சூரிய உதயத்திற்கு முன் செய்யும் வழக்கம் 
இல்லை.ஆனால் நரகசதுர்த்தி அன்று மட்டும் சூரிய உதயத்திற்கு முன் 
எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிக்கும்படி வரத்தை வாங்கினாள்.மேலும் 
"நல்ல எண்ணையில் மகாலட்சுமியும்" "வெந்நீரில் கங்கையும்"இருக்க 
வேண்டு மென வரம் வாங்கினாள்.இவ்வாறு குளிப்பவர்களுக்கு அகால
மரணமும்,நரக பயமும்,விலகும் என்று பகவான் அருளினார்.

வட நாட்டில் பல இடங்களில் தீபாவளி நாளை குபேர பூஜையாகவும்
மகா லட்சுமி பூஜையாகவும்,கொண்டாடுகிறார்கள்.புது கணக்குகள் 
அன்று ஆரம்பிப்பார்கள்.தீபாவளி நாளும்,அதை அடுத்த அமாவாசை
நாளும் மிகமிகப் புனித நாளாகும்.  
  

உடலில் தேய்க்க எண்ணெய் :
100 -மிலி  நல்லெண்ணையில் மிளகு 50 -எண்ணிக்கையில் போட்டு மித மாக காய்ச்சவும் மிளகு அனைத்தும் மிதந்து புகை வரும் சமயம் இறக்கி வடித்து சூடு ஆறியவுடன் தலை,மற்றும் உடல் முழுதும் தேய்த்து 15 -நிமிடம் கழித்து  வெந்நீரில்  குளிக்கவும்.

இதனால் உடலில் உஷ்ணம் நீங்குவதுடன்,தோலின் மேல் பகுதியில் 
இரத்த ஓட்டம் நன்கு சீராகும்,பாக்டீரியாவினால் ஏற்ப்படும் தொற்று 
அறவே நீங்கும். 


 
குளிக்க மூலிகை வெந்நீர் :
1 -ஆலம்பட்டை,
2 -அரசம் பட்டை,
3 -அத்திப்பட்டை,
4 -புரசம்பட்டை,
5 -மாவுலிங்கப்பட்டை  
ஐந்து மரப் பட்டைகளையும் நாட்டு மருந்து கடைகளில் வாங்கி இடித்து வெந்நீர் காய்ச்சும் போது போட்டு வெந்நீர் கொதித்தவுடன் குளிக்கவும். இதனால் உடல் புத்துணர்ச்சி பெறுவதுடன்,நோய் எதிர்ப்பு சக்தி கிட்டும்.
  

பிறகு புத்தாடைகள் உடுத்தி  முதலில் உண்ணும் "தீபாவளி லேகியம்"
செய்முறை :
1 - சுக்கு -50 -கிராம் 
2 - சித்தரத்தை  25 - கிராம்
3 -ஓமம்  10 - கிராம் 
4 - அரிசி திப்பிலி -25 - கிராம் 
5 - கண்டந் திப்பிலி -25 -கிராம் 
6 - விரலி மஞ்சள் -ஒரு துண்டு 
7 -நெய் - 50 - கிராம் 
8 - நல்லெண்ணெய்  -50-  கிராம் 
9 - பனை வெல்லம்  - 200  -கிராம் 

மருந்து சரக்குகளை வெயிலில் நன்றாக உலர்த்தி அம்மியில் போட்டு இடி த்து பொடித்துக் கொள்ளவும்.வாணலியில் சிறிது நீர் விட்டு வெல்லத்தை தூள் செய்து போட்டு கரைந்ததும் பாகுபதம் வரும் போது மருந்து பொடியை போட்டு கிளறவும்.லேகியம் போல் இறுகி வரும் பொது நெய்,எண்ணெய் விட்டு கிளறவும்,சிறிது எடுத்து விரல்களில் உருட்டிப் பார்த்தால் ஒட்டாத பதத்தில் இறக்கவும்.

தீபாவளி அன்று அதி காலையில் எண்ணை  ஸ்நானம் செய்ததும் புத்தாடை கள் அணிந்து கொண்டு முதலில் "தீபாவளி லேகியம்"ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து சுவைத்து சாப்பிடவும்.இதனால் உடலில் குளிர்ச்சி  சேராமல் தடுக் கும்,ஜலதோஷம் பிடிக்காது.கடலை மாவு,நெய் சேர்ந்த பலகாரங்கள் உண் டாலும் வயிறு மந்தமோ,அஜீரணமோ ஏற்ப்படாது.

இந்த லேகியம் பலகாரங்கள் உண்ட பிறகு அரை டீஸ்பூன் அளவு சாப்பிட  அனைத்தும் ஜீரணமாகி செரித்து விடும்.

இதுவரை ஆன்மீக விளக்கங்கள் அளிக்கப்பட்டது.ஆனால் இதில் வரும் புராணக் கதைகளை அறிவியலாளர்கள் ஏற்றுகொள்வதில்லை இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் முக்கியத் தேவையான தீபாவளி பண்டிகையின் அறிவியல் ஆய்வு விளக்கம் 
                             
பாகம் -2 ல் தொடரும் ...

நன்றி !

மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
22, புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு இந்தியா

அகத்தியர் குருகுலம், யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T - 624003
தமிழ்நாடு இந்தியா
செல் :9865430235  9095590855 – 9655688786 - 8695455549

பதிவுகளின் வகைகள்